Sunday 30 October 2011

பூண்டின் அற்புத சக்தி



பூண்டுக்கு அதன் முக்கியத்துவத்தை தருவது அலிசின் என்ற உட்பொருள்தான். இதுவே பூண்டுக்கு உரிய  வாசத்தை தருகிறது.பல வகை நோய்களை உண்டாக்கும் கிருமிகளின் வளர்ச்சியை தடுப்பதோடு, அழிக்கும் திறனும் இந்த அலிசினுக்கு உண்டு.

கிருமிகளின் வளர்ச்சியை தடுப்பதில் ஆண்டிபயாட்டிக்குகளைவிட பலமடங்கு இதன் திறன் கொண்டது பூண்டின் சாறு. பூண்டில் இத்தனை சக்தி உள்ளது. (இதனைத் தெரிந்துதான் நெப்போலியன் தனது படைவீரர்களை தினமும் உணவில் பூண்டினை சேர்க்க கட்டளையிட்டார்போலும்.)

வேம்பு மற்றும் இஞ்சி இவற்றைக் காட்டிலும், நுண்கிருமிகளுக்கு எதிரான செயல்பாடு பூண்டிலேயே அதிகம் காணப்படுகிறது.

ஒரு பல் பச்சை புண்டு சாப்பிட்டாலே வாயெல்லாம் நாறும் (அலிசின் வேலைதான்), இருந்தாலும் பச்சை பூண்டு சாப்பிட்டால்தான் ரொம்ப எபக்ட் சோ, தினமும் ஒரு பச்சை பூண்டு சாப்பிடுங்க, ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு டாடா சொல்லுங்க.

2 comments:

மகேந்திரன் said...

உங்கள் படைப்புகள் அத்தனையும் நன்று சகோதரி.
வலைச்சரம் மூலம் தங்கள் வலைத்தளம் வந்துள்ளேன்

இன்று முதல் உங்களைத் தொடர்கிறேன்... இத்தளம் மூலமாக..

நாகா ராம் said...

///உங்கள் படைப்புகள் அத்தனையும் நன்று சகோதரி./// கருத்துக்கு நன்றி

///இன்று முதல் உங்களைத் தொடர்கிறேன்... இத்தளம் மூலமாக.. /// உங்கள் ஆதரவுக்கு மிக்கநன்றி அண்ணா