Monday 17 October 2011

மதுரை மீனாட்சி அம்மன்




மலையத்வஜ பாண்டியன், காஞ்சனமாலை தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால் புத்திரகாமேஷ்டியாகம் செய்தனர். பார்வதிதேவி மூன்று ஸ்தனங்களுடைய பெண் குழந்தையாக வேள்விக்குண்டத்திலிருந்து தோன்றினாள். குழந்தையின் தோற்றத்தைக் கண்டு அரசன் வருந்தி இறைவனனை வேண்டினான். அப்போது, "இக்குழந்தை தன் கணவனை காணும்போது ஒரு ஸ்தனம் மறையும்" என்று அசரீரி ஒலித்தது.. குழந்தைக்குத் “தடாதகை" எனப்பெயரிட்டனர். தடாதகை பல கலைகளையும் சிறப்பாக கற்று தேர்ந்தாள்.

மலையத்வஜனனுக்கு பின் தடாதகை சிறப்பாக ஆட்சி செய்தாள். கன்னி ஆண்ட நாடு என்பதால் “கன்னிநாடு" எனப் பெயர் பெற்றது.

தடாதகை மணப்பருவத்தை அடைந்தாள். நால்வகைப் படைகளுடன் புறப்பட்டுச் சென்று திக்விஜயம் செய்து வென்றாள். இறுதியாகத் திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் சிவபெருமானையும் கண்டாள். கண்டவுடன் மூன்று ஸ்தனங்களில் ஒன்று மறைந்தது.   இறைவனே கணவன் என்பது புலப்பட்டு திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருமால் முதலிய தேவர்களும் முனிவர்களும் வந்திருந்தார்கள்.

சிவனுக்கு பக்கத்தில் தடாதகை இருந்ததை காண கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது. பிரம்மதேவன் வேத மந்திரம் ஓதி உடனிருந்து நடத்தினார். பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமான், திருமங்கல நாணைப் பிராட்டியாருக்குச் சூட்டினார்.

தடாதகைப் பிராட்டியே மீனாட்சி அம்மனாக விளங்குகிறார். பெருமான் திருமணஞ் செய்தருளியது, பெருமான் போகியாய் இருந்து, உயிர்களுக்குப் போகத்தை அருளுவதை நினைப்பூட்டும். பின்பு சிவபெருமான் தாம் உலகில் அரசு நடத்திக்காட்ட திருவுளங்கொள்ள, இடபக்கொடி மீன்கொடி ஆகியது. சோமசுந்தரர் சுந்தரபாண்டியனாய்க் கோலங்கொண்டு விளங்கினார். சிவகணங்கள் மானுடவடிவு கொண்டனர்.

விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருக்கும் சிவலிங்கத்தை பூஜித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டான். 
இக்கோயிலுனுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் தாமரை மொட்டைப் போன்றும் அதைச் சுற்றியுள்ள தெருக்கள் தாமரை இதழ்களாகவும் திகழ்கிறது.

மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதி, ஆவணி வீதி, மாசி வீதி, வெளி வீதி என மதுரை மாநகர் அமைக்கப்பட்டுள்ளது.

2 comments:

மகேந்திரன் said...

மதுரையம்பதியின் எழில்மிகு கோலாட்சி
புரியும் அன்னை மீனாட்சியின் வரலாறும்,
அங்கு அமைக்கப்பட்டுள்ள வீதிகளைப் பற்றியும்
அருமையா சொல்லியிருகீங்க சகோதரி.

நாகா ராம் said...

வாழ்த்துக்கு நன்றி அண்ணா