Friday 6 April 2012

மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் - சில தகவல்கள்... பகுதி 1


விபூதி விநாயகர்
 
தெற்கு கோபுரத்தை கடந்து உள் நுளையும்போது பக்தர்கள் விபூதியால் அர்ச்சிக்கும் விபூதி விநாயகர் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் விபூதியை விநாயகருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. 'விபூதி' என்றால் 'மேலான செல்வம்' என்று பொருள். இவரை வணங்கினால் வாழும் காலத்தில் பெரும் பொருளும் வாழ்க்கைக்கு பிறகு மோட்சம் எனும் பிறவா நிலை செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இரட்டை விநாயகர்


மீனாக்ஷி அம்மன் சன்னதிக்கு இடது புறத்திலும், பிரகாரத்திலும் இரட்டை விநாயகர் சன்னதி இருக்கிறது. இரட்டை விநாயகரை வழிபட்டால் திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை



முக்குறுணி விநாயகர்

மீனாக்ஷி அம்மன் திருக்கோவிலில் ஏராளமான விநாயகர் சிலைகள் இருந்தாலும் முக்குறுணி விநாயகரே உருவத்தால் பெரியவர். ஒரு குறுணி என்பது 4 படி (6கிலோ). விநாயகருக்கு 18 கிலோ பச்சரிசி மாவால் ஆன கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தி நாளில் படைக்கப்படுகிறது. அந்த பெயரே இவருக்கு நிலைத்துவிட்டது. திருமலை நாயக்கர் வண்டியூரில் தெப்பக்குளம் வெட்டியபோது பூமிக்குள் இந்த விநாயகர் சிலையை கண்டெடுத்தனர். அதை மீனாக்ஷி அம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்தார் இந்த விநாயகர் முன்பு உள்ள் நிலை விளக்குகளில் திருமலைநாயக்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உருவங்களை பார்க்கலாம்.

2 comments:

Radha rani said...

நாகா..எத்தனையோ முறை சுவாமி தரிசனம் செய்திருக்கிறேன்..நீங்கள் சொன்ன கூடுதல் தகவல்களுக்கு நன்றி.

நாகா ராம் said...

ராதா ராணி,

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ராதா ராணி... இன்னும் பல சுவாரஸ்யமான, ஆச்சர்யமான தகவல்களும் காத்திருக்கிறது :)