Wednesday 16 November 2011

தேங்காய் - தெரிந்ததும் தெரியாததும்...





தேங்காயில் உள்ள சத்துகள்

         தேங்காயில் புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும்  உள்ளன. தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையாக இளநீரில் புரதம் உள்ளது. குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது. 
 
         Medium Chain Fatty Acid தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் Capric Acid மற்றும் Lauric Acid  ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும்

வைரஸ் எதிர்ப்பு
 
           தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள Mono Laurin வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

ஆண்மைப் பெருக்கி 
 
           முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் E முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.

குழந்தை சிவப்பாக பிறக்க
 
     குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது. (அண்டைமாநிலத்தில் குழந்தை சிவப்பாக பிறக்க கர்ப்பிணிகளுக்கு இளநீர் கொடுக்கும் பழக்கம் உள்ளது.)

    இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

        ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

     இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.

               இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது.
       
             தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்தது தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. மலச்சிக்கல் விலகும். புற்று நோயை குணப்படுத்தும். புலால் உணவை விட உயர்ந்த சக்தி, அதிக சக்தி தரும் உணவு.

                 இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும். தேங்காய் அல்லது தேங்காய் பாலுடன் இனிப்புக் கலந்து சாப்பிட வேண்டும். தனியாகச் சாப்பிடக் கூடாது. கனிகளுடன் சேர்த்து சாப்பிடலாம். தேங்காய் பாலை எல்லா இயற்கைச் சாறுகளுடனும் இணைத்தும் சாப்பிடலாம்.



:

   .

7 comments:

AltF9 Admin said...

Good information

மகேந்திரன் said...

அடேயப்பா..
தேங்காயில் இவ்வளவு விஷயம் இருக்கா????
பதிவு மிகவும் அருமை..
பகிர்வுக்கு நன்றி சகோதரி...

குறையொன்றுமில்லை. said...

தேங்காய் பற்றி இருவித அபிப்ராயம் இருக்கே. இது கொழுப்பு சத்து நிறைத்தது சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தக்கூடாதுன்னும் சொல்ராங்க.

நாகா ராம் said...

:-) உங்கள் பதிவு கண்டு மிக்க மகிழ்ந்தேன்.
தேங்காயில் இருக்கும் நல்ல பொருள்களை மட்டும் கிரகிக்க:
1. தேங்காயை அதிகம் சூடுபடுத்தக்கூடாது. சமையல் பக்குவப்பட்டதும் கீழே இறக்கும் சமையத்தில் தேங்காய் தூவி ஒரு பிரட்டு பிரட்டி எடுத்துவிட வேண்டும். அல்லது ஸ்ரார்த்த சமையல் போல் வேகவைத்து தாளிக்க வேண்டும். அப்போது மிகக்குறைந்த நேரமே அடுப்பில் இருக்கும்.
2. பச்சை தேங்காய் உடலுக்கு மிக நல்லது. பற்கள் உறுதியாகவும் உதவும். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மிருதுவான, கடினமான, மிக கடினமான பொருளை உண்டால் பற்கள் உறுதி பெறும் என்பது சமீபத்திய ஆரய்ச்சி. நம்கலாச்சார உணவுகள் எந்தவகையிலும் நமக்கு கேடு விளைவிப்பதில்லை. கோவிலில் அர்ச்சனை செய்த தேங்காயை சமைக்காமல் அப்படியே சாப்பிடும் பழக்கம், பண்டிகை காலங்களில் மிககடினமான கரும்பு, சற்று கடினமான சீடை, முறுக்கு, மிருதுவான பலகாரங்கள் உண்பது பற்களுக்கும் உடலுக்கும் மிக நல்லது. ஆனால் அளவாக இருக்க வேண்டும்.
வருகைக்கு மிக்க நன்றி :-)

நாகா ராம் said...

உங்கள் மலைப்பான கருத்துக்கு நன்றி அண்ணா :-)

Harini said...

சிறந்த பயனுள்ள தகவல்கள்...நன்றி....

நாகா ராம் said...

கருத்துக்கு நன்றி harini :-)