Wednesday, 16 November 2011

தேங்காய் - தெரிந்ததும் தெரியாததும்...





தேங்காயில் உள்ள சத்துகள்

         தேங்காயில் புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும்  உள்ளன. தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையாக இளநீரில் புரதம் உள்ளது. குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது. 
 
         Medium Chain Fatty Acid தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் Capric Acid மற்றும் Lauric Acid  ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும்

வைரஸ் எதிர்ப்பு
 
           தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள Mono Laurin வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

ஆண்மைப் பெருக்கி 
 
           முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் E முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.

குழந்தை சிவப்பாக பிறக்க
 
     குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது. (அண்டைமாநிலத்தில் குழந்தை சிவப்பாக பிறக்க கர்ப்பிணிகளுக்கு இளநீர் கொடுக்கும் பழக்கம் உள்ளது.)

    இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

        ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

     இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.

               இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது.
       
             தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்தது தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. மலச்சிக்கல் விலகும். புற்று நோயை குணப்படுத்தும். புலால் உணவை விட உயர்ந்த சக்தி, அதிக சக்தி தரும் உணவு.

                 இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும். தேங்காய் அல்லது தேங்காய் பாலுடன் இனிப்புக் கலந்து சாப்பிட வேண்டும். தனியாகச் சாப்பிடக் கூடாது. கனிகளுடன் சேர்த்து சாப்பிடலாம். தேங்காய் பாலை எல்லா இயற்கைச் சாறுகளுடனும் இணைத்தும் சாப்பிடலாம்.



:

   .

Monday, 7 November 2011

கை கால்களில் வியர்வை

                                                                
  • இலந்தை மர இலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து  உள்ளங்கை, கால்களில் தடவி வந்தால் அதிகளவு வியர்வை ஏற்படுதல் குறையும்.

  • விளாம்பழத்தை ஓடு நீக்கி சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து தினமும் சாப்பிட்டுவர கை, கால்களில் வியர்வை வடிவது சரியாகும்.

Thursday, 3 November 2011

இலவங்க பட்டையின் மருத்துவகுணங்கள்




நீரிழிவு நோய்க்கு

நீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் லவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது.

வாய் துர்நாற்றம் நீங்க

வயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் லவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.

செரிமான சக்தியைத் தூண்ட

எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில் லவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.

இருமல், இரைப்பு
     
சளித்தொல்லையால் சிலர் வறட்டு இருமலுக்கு ஆளாக நேரிடும். காச நோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்கு ஆளாவார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்கவைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்திவந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.

விஷக்கடிக்கு

சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க

வயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை குணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.

பெண்களுக்கு

குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு கருவாப்பட்டை கஷாயம் செய்து கொடுத்து வந்தால் கருப்பை வெகு விரைவில் சுருங்கி சாதாரண நிலைக்கு வரும். அதிக உதிரப்போக்குள்ள பெண்களுக்கும் இது சிறந்த மருந்து.

தாது விருத்திக்கு

தாது நட்டம் உள்ளவர்கள் இன்று பகட்டு விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தைத் தொலைத்துக்கொண்டிருப்பார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையை தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம்.

இத்தகைய அரிய பயன்களைக் கொண்ட கருவாப்பட்டையை இனியும் ஒதுக்கலாமா... முன்னோர்களின் வழியைப் பின்பற்றி நாமும் நோயின்றி நூறாண்டு வாழ்வோம்.
நன்றி:நக்கீரன் 

Sunday, 30 October 2011

பூண்டின் அற்புத சக்தி



பூண்டுக்கு அதன் முக்கியத்துவத்தை தருவது அலிசின் என்ற உட்பொருள்தான். இதுவே பூண்டுக்கு உரிய  வாசத்தை தருகிறது.பல வகை நோய்களை உண்டாக்கும் கிருமிகளின் வளர்ச்சியை தடுப்பதோடு, அழிக்கும் திறனும் இந்த அலிசினுக்கு உண்டு.

கிருமிகளின் வளர்ச்சியை தடுப்பதில் ஆண்டிபயாட்டிக்குகளைவிட பலமடங்கு இதன் திறன் கொண்டது பூண்டின் சாறு. பூண்டில் இத்தனை சக்தி உள்ளது. (இதனைத் தெரிந்துதான் நெப்போலியன் தனது படைவீரர்களை தினமும் உணவில் பூண்டினை சேர்க்க கட்டளையிட்டார்போலும்.)

வேம்பு மற்றும் இஞ்சி இவற்றைக் காட்டிலும், நுண்கிருமிகளுக்கு எதிரான செயல்பாடு பூண்டிலேயே அதிகம் காணப்படுகிறது.

ஒரு பல் பச்சை புண்டு சாப்பிட்டாலே வாயெல்லாம் நாறும் (அலிசின் வேலைதான்), இருந்தாலும் பச்சை பூண்டு சாப்பிட்டால்தான் ரொம்ப எபக்ட் சோ, தினமும் ஒரு பச்சை பூண்டு சாப்பிடுங்க, ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு டாடா சொல்லுங்க.

Monday, 17 October 2011

மதுரை மீனாட்சி அம்மன்




மலையத்வஜ பாண்டியன், காஞ்சனமாலை தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால் புத்திரகாமேஷ்டியாகம் செய்தனர். பார்வதிதேவி மூன்று ஸ்தனங்களுடைய பெண் குழந்தையாக வேள்விக்குண்டத்திலிருந்து தோன்றினாள். குழந்தையின் தோற்றத்தைக் கண்டு அரசன் வருந்தி இறைவனனை வேண்டினான். அப்போது, "இக்குழந்தை தன் கணவனை காணும்போது ஒரு ஸ்தனம் மறையும்" என்று அசரீரி ஒலித்தது.. குழந்தைக்குத் “தடாதகை" எனப்பெயரிட்டனர். தடாதகை பல கலைகளையும் சிறப்பாக கற்று தேர்ந்தாள்.

மலையத்வஜனனுக்கு பின் தடாதகை சிறப்பாக ஆட்சி செய்தாள். கன்னி ஆண்ட நாடு என்பதால் “கன்னிநாடு" எனப் பெயர் பெற்றது.

தடாதகை மணப்பருவத்தை அடைந்தாள். நால்வகைப் படைகளுடன் புறப்பட்டுச் சென்று திக்விஜயம் செய்து வென்றாள். இறுதியாகத் திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் சிவபெருமானையும் கண்டாள். கண்டவுடன் மூன்று ஸ்தனங்களில் ஒன்று மறைந்தது.   இறைவனே கணவன் என்பது புலப்பட்டு திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருமால் முதலிய தேவர்களும் முனிவர்களும் வந்திருந்தார்கள்.

சிவனுக்கு பக்கத்தில் தடாதகை இருந்ததை காண கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது. பிரம்மதேவன் வேத மந்திரம் ஓதி உடனிருந்து நடத்தினார். பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமான், திருமங்கல நாணைப் பிராட்டியாருக்குச் சூட்டினார்.

தடாதகைப் பிராட்டியே மீனாட்சி அம்மனாக விளங்குகிறார். பெருமான் திருமணஞ் செய்தருளியது, பெருமான் போகியாய் இருந்து, உயிர்களுக்குப் போகத்தை அருளுவதை நினைப்பூட்டும். பின்பு சிவபெருமான் தாம் உலகில் அரசு நடத்திக்காட்ட திருவுளங்கொள்ள, இடபக்கொடி மீன்கொடி ஆகியது. சோமசுந்தரர் சுந்தரபாண்டியனாய்க் கோலங்கொண்டு விளங்கினார். சிவகணங்கள் மானுடவடிவு கொண்டனர்.

விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருக்கும் சிவலிங்கத்தை பூஜித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டான். 
இக்கோயிலுனுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் தாமரை மொட்டைப் போன்றும் அதைச் சுற்றியுள்ள தெருக்கள் தாமரை இதழ்களாகவும் திகழ்கிறது.

மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதி, ஆவணி வீதி, மாசி வீதி, வெளி வீதி என மதுரை மாநகர் அமைக்கப்பட்டுள்ளது.

Saturday, 15 October 2011

அருள்மிகு கற்பக வினாயகர், பிள்ளையார்பட்டி





அற்புத கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக் களஞ்சியத்
திருக்கை சென்று பொற்பதம் பணிந்து
பாரீர் பொய்யில்லை கண்ட உண்மை.
                                  -கவிஞர் கண்ணதாசன்