Monday, 13 February 2017

கோளறு பதிகம்



வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே


என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு ப‌தினெட்டொ டாறும்
உடனாய நாள்க ள‌வைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

உருவளர் பவளமேனி ஒளிநீ ற‌ணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருக‌லர் கொன்றைதிங்கள் முடிமேல‌ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய‌தூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

மதிநுதன் மங்கையோடு வடவா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

நஞ்ச‌ணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதம‌வையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

வாள்வரி அதளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோள‌ரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆள‌ரி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

செப்பிள முலைநன்மங்கை ஒருபாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாத மிகையான‌ பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

வேள்பட விழிசெய்தென்று விடைமேலிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த வத‌னால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் ற‌னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

கொத்தல‌ர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும்நாக முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ ட‌மணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.


Wednesday, 23 December 2015

தொடங்கும் வேலைகள் தடையின்றி இனிதே நிறைவடைய பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்




திருஆலவாயில்(மதுரையில்) சமணர்களுடன் வாதிடுவதற்கு புறப்படும் பொழுது சொக்கநாதப்பெருமானை வணங்கி சம்பந்தப்பெருமான் பாடிய பாடல் இது.

திருஞானசம்பந்தப்பெருமான் அனல்வாதம், புனல்வாதம் செய்து சமணர்களை வென்றது நாம் அறிந்ததே.

திருச்சிற்றம்பலம்

பாடியவர்: திருஞானசம்பந்தர்         தலம்: மதுரை          பண்:பழம்பஞ்சரம் 

வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் 
ஆதமில்லி அமணொடு தேரரை 
வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே
பாதி மாதுடன் ஆய பரமனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே

வைதிகத்தின் வழி ஒழுகாத அக் 
கைதவம் உடைக் கார் அமண் தேரரை 
எய்தி, வாது செயத் திருவுள்ளமே
மைதிகழ் தரு மாமணி கண்டனே
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


மறை வழக்கம் இலாதமா பாவிகள் 
பறி தலைக் கையர் பாயுடுப்பார்களை 
முறிய வாது செயத் திருவுள்ளமே
மறி உலாம் கையில் மா மழுவாளனே
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


அறுத்த அங்கம் ஆற ஆயின நீர்மையைக்
கறுத்த வாழ் அமண் கையர்கள் தம்மொடும் 
செறுத்து, வாது செயத் திருவுள்ளமே
முறித்த வாண் மதிக் கண்ணி முதல்வனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


அந்தணாளர் புரியும் அருமறை 
சிந்தை செய்யா அருகர் திறங்களைச் 
சிந்த வாது செயத் திருவுள்ளமே
வெந்தநீறு அது அணியும் விகிர்தனே
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


வேட்டு வேள்வி செயும் பொருளை விளி 
மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை 
ஓட்டி வாது செயத் திருவுள்ளமே
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 
  


அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம் 
விழல் அது என்னும் அருகர் திறத்திறம் 
கழல வாது செயத் திருவுள்ளமே
தழல் இலங்கு திருவுருச் சைவனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 

நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற 
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத் 
தேற்றி வாது செயத் திருவுள்ளமே
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


நீலமேனி அமணர் திறத்து நின் 
சீலம் வாது செயத் திருவுள்ளமே
மாலும் நான்முகனும் காண்பரியதோர் 
கோல மேனியது ஆகிய குன்றமே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


அன்று முப்புரம் செற்ற அழக நின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத் 
தென்ற வாது செயத் திருவுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு 
வாடல் மேனி அமணரை வாட்டிட
மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப் 
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே 

திருச்சிற்றம்பலம் 

Wednesday, 17 April 2013

"என் கணவர்" – திருமதி.செல்லம்மாள் பாரதி உரை

1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்” என்ற தலைப்பில் திருமதி.செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.
வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.
ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்… விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்.
உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.
கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?
வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால் என்ன செய்ய முடியும்?
கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது.
அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?
கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.
கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.
காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.
அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.
சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!

இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.

புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. “விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!” என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

Friday, 22 March 2013

தண்ணீரை வீணாக்காமல் இருக்க சில டிப்ஸ் இங்கே...












                      


ஷவரை திருகிவிட்டு ஆனந்தமாக குளிப்பது நன்றாகதான் இருக்கும். ஆனால் ஒரு குடம் நீருக்காக கஷ்டப்படுபவர்களை நினைத்தாவது தண்ணீரை அவ்வாறு வீணாக்காமல் வாளியில் நீர் பிடித்து குளியுங்கள். 

வீட்டை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யத்தேவையில்லை. ஈரத்துணியால் துடைத்தாலே போதும்.

 

தினமும் கைகளால் துவைப்பதைவிட வாரத்திற்கு ஓரிருமுறை வாஷிங் மெஷினில்  துணிகளை துவைக்கலாம்.

கார், பைக் போன்றவற்றை ஈரத்துணியால் துடைத்தால் போதும், நிறைய தண்ணீர் ஊற்றி அலம்ப வேண்டாம்.


                              

ஷேவ் செய்யும்போதும், பல் துலக்கும்போதும் வாஷ் பேசினில் தண்ணீரை திறந்துவிட வேண்டாம்.

காய்கறிகள் அலம்பிய நீரை சேமித்து செடிகளுக்கு ஊற்றலாம். செடிகளுக்கு நீரூற்ற பூவாளிகளை பயன்படுத்தலாம்.



 மொட்டைமாடியில் விழுந்து வீணாகச்  சாக்கடையில் கலக்கும் நீரைக்கூட திறமையாக அறிவியல் முறைப்படி சேமித்து, சுத்திகரித்து உபயோகப்படுத்தலாம்.கிணறு உள்ளவர்கள் கிணற்றில் அந்த நீரை விழச்செய்யலாம். நிலத்தடி நீரும் உயரும்.



இன்றே ஒவ்வொரு துளி நீரையும் சேமித்தால்தான் நாளைய தலைமுறை தண்ணீருக்காக போராடாமல் இருக்கும்.

நன்றி-PTA செய்தி O'01

















Wednesday, 25 April 2012

மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் - சில தகவல்கள்... பகுதி 3: ககோளம் - பூகோளம்



ககோளம் - பூகோளம்

மீனாக்ஷி அம்மன் கோவிலில் பழைய திருமண மண்டபத்தில் ககோளம், பூகோளம் என்ற இரண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் பாற்கடல், தயிர்கடல், நெய்கடல், தேன் கடல், சுத்த நீர் கடல் ஆகியவற்றை பார்க்கலாம்.

 

ககோளம்

சூரிய மண்டலம் 9 ஆயிரம் யோசனை (1 யோசனை = 24 கிலோமீட்டர்) பரப்பளவு கொண்டதாக இருந்தது. அதை சுற்றி, 2700 யோசனைபரப்பு கொண்ட வளையம் இருந்தது. நாம்வாழும் பூமி 50 கோடி யோசனை விஸ்தீரணம் உடையதாக இருந்தது. இந்த பூமியின் மத்தியில் ஜம்புத்வீபம் என்ற தீவு இருந்தது. அந்த தீவில் மேருமலை அமைந்திருந்தது. மேருமலைக்கு கிழக்கே இந்திர பட்டணமும், தெற்கில் எமபட்டணமும், மேற்கில் வருண பட்டணமும் இருந்தன. இந்த பட்டணங்களில் உலகை பாதுகாக்க தேவர்கள் வசிப்பார்கள். இந்த மண்டலங்களில் என்னென்ன தீவுகள், வீதிகள் இருந்தன என்பது குறித்து விபரம் ககோள ஓவியத்தில் இருக்கிறது. அக்கால தேவர்கள் உலகை இந்த ஓவியத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஓவியத்தில்,
  • அஸ்வினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம் ஆகிய நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட நாகவீதி,
  •  புனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய ஐராவத வீதி, ஆர்ஷ வீதி, கோவீதி
  •  திருவோணம், அவிட்டம், சதயம் ஆகிடவை இணைந்த ஜரத்துருவ வீதி,
  •  ஹஸ்தம், சித்திரை, சுவாதி அடங்கிய மற்றொரு நாக வீதி
  •  விசாகம், ஜேஷ்டம், அனுஷம் ஆகியவை அடங்கிய மிருக வீதி,
  •  மூலம், பூராடம், உத்திராடம் ஆகியவை அடங்கிய வைஸ்வாநர வீதி உள்ளிட்ட பல வீதிகள் அடங்கியுள்ளன.

பூகோளம்

இந்த பிரபஞ்சத்தில் ச்வேதத்வீபம் என்னும் கிரகம் உள்ளது. அந்த கிரகத்தில் பாற்கடல் இருக்கிறது. பூமியில் உப்புநீர் கடல் இருப்பது போல மற்ற கிரகங்களில் பலவகை சமுத்திரங்கள் இருப்பதாக வேத இலக்கியங்களின் மூலம் தெரிகிறது. பாற்கடல், தயிர்கடல், நெய்கடல், தேன் கடல், எண்ணெய் கடல், மதுக்கடல், ஆகியவை இதில் அடங்கும். இந்த கடல்களுக்குள் கசேறு, இந்திரதீவு, தாமிரபரண தீவு, கபஸ்திமம், நாகத்தீவு, சௌமிய தீவு, காந்தர்வ தீவு, பாரத்தீவு இருந்தன. இவை பற்றிய விஷயங்களை அந்த ஓவியத்தில் காணலாம்.

Tuesday, 24 April 2012

குபேர பூஜை

தீபாவளி, அக்ஷய த்ரிதியை, வெள்ளிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி போன்ற நாட்களில் மாலை குபேரனை நினைத்து பூஜை செய்வதால் செல்வம் பெருகும், குடும்பம் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.



குபேரனின் திருஉருவப்படத்திற்கு முன் பணம், பொருள் வைத்து பூமாலை சாற்றி 12 அகல் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். பூ, அட்சதை கையில் எடுத்துக்கொண்டு 12 முறை இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.

த்வாதஸ லிங்கஸ்துதி

சௌராஷ்ட்ரே
ஸோமனாதஞ்ச ஸ்ரீசைல்யே
மல்லிகார்ஜூனம் உஞ்சைன்ய
மஹாகாளீம் ஓங்கார மமலேஸ்வரம்
பால்யம் வைத்யனாதஞ்ச டாகின்யாம்
பீமஸங்கரம் ஸேது பந்தேது ராமேஸம்
நாகேஸம் தாறுகாவனே
வாரணஸ்யாம்ஸூ விஸ்வேஸம்
த்ரியம் பகம்கௌதமீதடே
ஹிமாலயேது கேதாராம் குஸ்மேஸஞ்ச
சிவாலயே ஹேதானி ஜ்யோதி லிங்கானி
ஸாயங்கால ஹபடேர் நித்தயம்
ஸப்த ஜன்மக்ருதம் பாபம்
ஸ்மரணேன வினிஸ்யதி:

குபேர நாமாவளி

ஓம் குபேராய நம:
ஓம் நரவாகனாய நம:
ஓம் சிவஸகாய நம:
ஓம் ஸ்ரீநிவாச ஸந்துஸ்டாய நம:
ஓம் பம்மாவதி ப்ரிய அனுஜாய நம:
ஓம் யக்ஷராஜாய நம:
ஓம் தனதான்யாதிபதயே நம:
ஓம் மணி பத்ரார்ச்சிதாய நம:
ஓம் மான்யாய நம:
ஓம் மஹனீயாய நம:
ஓம் மஹார்ஹ மணி பூஷணாய நம:
ஓம் ஸ்ரீவித்யா மந்த்ர உபாஸஹாய நம:
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகா ப்ரிய பக்தாய நம:
ஓம் திக்பாலாய நம:
ஓம் நவநாயகாய நம:
ஓம் நிதினாம் பதயே நம:



பின் பால் பாயசத்தை நைவேத்யம் செய்து கற்பூர ஆரத்தி எடுத்து, குங்குமத்தை கரைத்து அதையும் ஆரத்தி எடுத்து நிறைவு செய்ய வேண்டும்.
குடும்பத்தில் அனைவரும் இதில் கலந்துகொண்டு செய்வது நல்லது.
பூஜை முடிந்தவுடன் எல்லோரும் குபேரன் திருஉருவப்படத்திற்கும், பணம் பொருளிலும் அட்சதை தூவி நமஸ்கரிக்க வேண்டும்.

மற்றவர்களையும் அட்சதைபோட சொல்லி அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் தருதல் நல்லது.






Monday, 9 April 2012

மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் - சில தகவல்கள்... பகுதி 2

48 ஆண்டாக மூடப்பட்ட கருவறை 

மீனாட்சி அம்மன் கோயிலில் சொக்கநாதர் கருவறை 48 ஆண்டுகளாக  மூடப்பட்டு இருந்தது. 1330ம் ஆண்டு அன்னியர் படையெடுப்பின்போது அம்பாளையும், சுவாமியையும் உடைத்து நொறுக்க முயற்சி நடந்தது. 

கோயில் ஸ்தானிகர்கள் கருவறை வாயிலை கற்சுவர் கொண்டு மூடி, கருவறைக்கு முன்பு அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவலிங்கத்தை அமைத்தனர். அன்னியர்கள் அந்த சிலைதான் சுந்தரேஸ்வரர் என்று நினைத்து அதை சிதைக்க முற்பட்டனர். சுந்தரேஸ்வரர் சன்னதி 48 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு பூஜை இல்லாமல் இருந்தது. 

கம்பண்ணர் என்ற வீரர் அன்னியர்களை வென்று மீண்டும் கருவறையை திறக்க ஏற்பாடு செய்தார். அப்போது 48 ஆண்டுகளுக்கு முன்பு பூசப்பட்ட சந்தனம் நறுமணம் வீசியது. சிவலிங்கத்தின் இருபுறமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளி விளக்குகள் அணையாமல் எரிந்துகொண்டு இருந்தது. 

சிதைக்கப்பட்ட அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமி சன்னதியை ஒட்டி, பிரகாரத்தில் உள்ளது. அதன் அருகிலேயே இந்த வரலாறும் இடம் பெற்றுள்ளது.

மாதப்பெயர்களில் வீதிகள் 

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பிற கோவில்களில் இல்லாத ஒரு விசேஷம் உண்டு. அதாவது தமிழ் மாதங்களில் நடக்கும் விழாவின் போது, சுவாமி, அம்பாள் எந்த வீதிகளில் எழுந்தருள்கிறார்களோ அந்த வீதி, அம்மாதத்தின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஆடி, சித்திரை, ஆவணி, மாசி வீதி என கோயிலைச்சுற்றி நான்கு வீதிகள் இருக்கிறது.


இதில் ஆவணிவீதி மட்டும் ஆவணி மூல வீதி என்று அழக்கப்படுகிறது. சிவனின் திருவிளையாடல்களில் 'பிட்டுக்கு மண் சுமந்த லீலை' இம்மாதத்தில் நிகழ்ந்தது. எனவே, ஆவணி மூலம் நட்சத்திரத்தில் பிட்டுத்திருவிழா இங்கு விசேஷமாக நடக்கிறது. இவ்விழாவின்போது சுவாமி ஆவணி மூலவீதியில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

முதல் திருவிளையாடல்

மதுரையில் சிவபெருமான், 63 திருவிளையாடள்களை நிகழ்த்தினார். இதில் முதல் திருவிளையாடலாக இந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்த நிகழ்வு அமைந்தது. இந்த திருவிளையாடல் சித்ரா பௌர்ணமியின்போது நடக்கிறது. அன்று உச்சிகாலத்தில்சிவன் சன்னதி எதிரில், இந்திரன் சிலையை வைத்து சிவனுக்கு தீபாராதனை செய்கின்றனர். இந்த பூஜையை இந்திரனே செய்வதாக ஐதீகம்.

Friday, 6 April 2012

மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் - சில தகவல்கள்... பகுதி 1


விபூதி விநாயகர்
 
தெற்கு கோபுரத்தை கடந்து உள் நுளையும்போது பக்தர்கள் விபூதியால் அர்ச்சிக்கும் விபூதி விநாயகர் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் விபூதியை விநாயகருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. 'விபூதி' என்றால் 'மேலான செல்வம்' என்று பொருள். இவரை வணங்கினால் வாழும் காலத்தில் பெரும் பொருளும் வாழ்க்கைக்கு பிறகு மோட்சம் எனும் பிறவா நிலை செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இரட்டை விநாயகர்


மீனாக்ஷி அம்மன் சன்னதிக்கு இடது புறத்திலும், பிரகாரத்திலும் இரட்டை விநாயகர் சன்னதி இருக்கிறது. இரட்டை விநாயகரை வழிபட்டால் திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை



முக்குறுணி விநாயகர்

மீனாக்ஷி அம்மன் திருக்கோவிலில் ஏராளமான விநாயகர் சிலைகள் இருந்தாலும் முக்குறுணி விநாயகரே உருவத்தால் பெரியவர். ஒரு குறுணி என்பது 4 படி (6கிலோ). விநாயகருக்கு 18 கிலோ பச்சரிசி மாவால் ஆன கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தி நாளில் படைக்கப்படுகிறது. அந்த பெயரே இவருக்கு நிலைத்துவிட்டது. திருமலை நாயக்கர் வண்டியூரில் தெப்பக்குளம் வெட்டியபோது பூமிக்குள் இந்த விநாயகர் சிலையை கண்டெடுத்தனர். அதை மீனாக்ஷி அம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்தார் இந்த விநாயகர் முன்பு உள்ள் நிலை விளக்குகளில் திருமலைநாயக்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உருவங்களை பார்க்கலாம்.

Thursday, 15 March 2012

பாரதியின் வாழ்வியல்


ஆன்மிகம் பற்றி நவீன தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் எழுதத் தொடங்கியவர் பாரதியார்தான். பாஞ்சாலி சபதம், பகவத்கீதை ஆகியவற்றை புதிய தமிழில் அவரே வடித்துக் கொடுத்தார்.

ஆன்மிகத்தைத் தனி மனிதன் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்து ஆன்ம ஒளி பெறவேண்டும் என்பதற்காக தன் எழுத்தைச் செலவிட்ட மறுமலர்ச்சி எழுத்தாளர்களுள் பாரதியே முதலிடம் பெறுகிறார்.



பாரதியின் பிரார்த்தனை

கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்குள்ள மனத்திடனும், இளைஞருடைய உத்ஸாகமும், குழந்தையின் ஹிருதயமும், தேவர்களே, எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க!

பாரதியின் சங்கல்பம் 

பொழுது வீணே கழிய இடங்கொடேன். லௌகிகக் காரியங்களை ஊக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும் அவை தோன்றும் பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன்.

மறைத்தும் தற்புகழ்ச்சி பாராட்டுதல் விரும்பேன். மூடரின் உள்ளத்தில் என்னைப் பற்றிய பொய் மதிப்புண்டாக இடங்கொடேன்.

சர்வ சக்தியுடைய பரம்பொருளை தியானத்தால் என்னுள்ளே புகச் செய்து எனது தொழில்களெல்லாம் தேவர்களின் தொழில் போல் இயங்குமாறு சூழ்வேன்.

பொய்மை, இரட்டுற மொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.

எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த சிந்தனை இவற்றோடிருப்பேன்.

பாரதி போற்றும் மனிதன் 

வஞ்சனை, கபடம் என சமயத்திற்கேற்ப பிழைப்பவன், நரி.

ஊக்கமின்றி ஏதேனுமொன்றை நினைத்துக்கொண்டு மனம் சோர்ந்திருப்பவன் தேவாங்கு.

மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் பாம்பு.

தர்மம், புகழ் போன்றவற்றைப் பற்றி கவலையின்றி அற்ப சுகங்களில் மூழ்கிக் கிடப்பவன் பன்றி.

சொந்தமாக பிழைக்காமல், அந்த அக்கறை இன்றி பிறருக்குப் பிரியமானவனாக நடந்து கொண்டு, அவர்கள் கொடுப்பதைக்கொண்டு வயிறு வளர்ப்பவன் நாய்.

அறிவின் துணைகொண்டு பெரும் பொருளைச் சேர்க்கும் வழியின்றி, முன்னோரின் சாஸ்திரங்களை, பெருமைகளை மட்டுமே வாயினால் அடிக்கடி திரும்பத் திரும்பக் கூறுபவன் கிளிப்பிள்ளை.

பிறர் நம்மை எவ்வளவு அவமதித்தாலும், அந்த அக்கிரமத்தைத் தடுக்க முயற்சி செய்யாமல், தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன், கழுதை.

வீண் மினுக்கு மினுக்கி டம்பம் பாராட்டுகிறவன் வான்கோழி.

தான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்துச் சாப்பிடாமல் பிறரின் சொத்தை அபகரித்து உண்டு வயிறு வளர்ப்பவன் கழுகு.

ஒரு நவீன உண்மை வரும்போது அதனை ஆவலோடு அங்கீகரித்து அறிந்து கொள்ளாமல்,அதனைக் கண்டு வெறுப்படைகிறவன் வெளிச்சத்தைக் கண்டு அஞ்சும் ஆந்தையைப் போன்றவன்.

ஒவ்வொரு நிமிஷமும் சத்தியத்தைப் பேசி, தர்மத்தை ஆதரித்து, பரமார்த்தத்தை அறிய முயலுகிறவனே மனிதனென்றும் தேவனென்றும் சொல்லுவதற்கு உரியவன் ஆவான்.



Tuesday, 20 December 2011

Durgama Recipe: க்ரிஸ்பி கோகனட் கோபி

Durgama Recipe: க்ரிஸ்பி கோகனட் கோபி: காலிஃப்ளவர் - 1 மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன் தேங்காய் பால் பவுடர் - 2 ஸ்பூன் எண்ணெய்...

Wednesday, 14 December 2011

மலையாளிகள் எதிரிகளா..??!!


பண்டைய தமிழ் இலக்கியங்கள்  சோழ, பாண்டிய மக்களை மட்டுமல்லாது சேர நாட்டு மக்களையும் தமிழர்களாக நம் உற்ற மக்களாகவே கண்டுள்ளது. இதற்கு மிகச்சிறந்த சான்றாக சிலப்பதிகாரம் உள்ளது. தமிழனின் வீரத்தைப்பற்றி கூறும் ஒரு பகுதியில் சேரன் செங்குட்டுவன் கண்ணகி சிலை எடுத்து கோவில் கட்ட இமயத்திலிருந்து கல் எடுத்துவந்த நிகழ்வை எடுத்துக்காட்டாக கூறலாம். சிலப்பதிகாரம் - வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் பற்றி பல தகவல்களைத் தருகிறது. தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்ட சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைக்க எண்ணி, அதற்காகப் பொதிய மலையில் கல்லெடுத்துக் காவிரி ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்குச் சான்றாகாது என்று எண்ணினான். வடநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துக்கு சென்ற சமயம் தமிழ் மன்னர்களை வடநாட்டு வேந்தரான கனக விசயர் எள்ளி நகையாடினார். அவருடன் போர்புரிந்து  வென்று, இமயமலையில் கல்லெடுத்து, அவர்கள் தலையிலேயே கற்களை வைத்து கங்கை ஆற்றில் நீர்ப்படுத்திச் சேர நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை எடுக்க அவர் முடிவு செய்தார்.

 
 
இதன்படியே வட நாட்டுக்குப் படை நடத்திச் சென்று, எண்ணியபடியே கனக விசயர் தலையில் கல்வைத்து  கண்ணகிக்குச் சிலை எடுத்ததாகவும், மாடலன் என்னும் மறையோனின் அறிவுரைகளைக் கேட்டுச் சினம் தணிந்து கனக விசயரைச் சிறையினின்றும் விடுவித்து, அறச் செயல்களில் ஈடுபடச் செங்குட்டுவன் முடிவு செய்தான் என்பதும், கண்ணகிக்குக் கோயில் எடுத்த விழாவில் கனக விசயர், இலங்கை மன்னன், மாழுவ மன்னன், குடகக் கொங்கர் முதலானோர் கலந்து கொண்டனர் என்பதும் சிலப்பதிகாரம் தரும் செய்திகள்.
 




இன்றும் அந்த கண்ணகி கோவிலில் தமிழ்நாட்டு மக்களும், கேரளமக்களும் பொங்கலிட்டு வணங்கிவருகின்றனர். பண்டைய காலத்திலிருந்து இன்று வரை தமிழ்நாட்டு மக்களும், கேரள மக்களும் ஒற்றுமையுடன் இருப்பதற்கு சிலப்பதிகாரமும், கண்ணகி கோவிலும் மிகச்சிறந்த சான்று. இப்படி ஒற்றுமையாக இருக்கும் மக்களிடையே அரசியலை புகுத்தி வேடிக்கை பார்ப்பது நியாயமா..??!! மனிதனாகப் பிறந்து தமிழ், மலையாள மக்களுக்கு தெய்வமாய் விளங்கும் அந்த கண்ணகிக்குதான் வெளிச்சம்...

Monday, 5 December 2011

திருவிளக்கு வழிபாடு




கடவுள் ஒளி வடிவானவர் என்பதை நமக்கு நினைவூட்டுவதே திருக்கார்த்திகைத் திருநாள். இல்லற விளக்கான பெண்களுக்கே இவ்விழா முக்கியமானது. இதனை "தையலார் கொண்டாடும் தொல் கார்த்திகைத் திருநாள்" என்று ஞானசம்பந்தப் பெருமான் கூறியுள்ளார். ஆகவே இத்திருவிளக்கு வழிபாடு பெண்களுக்கு உரித்தான வழிபாடாகும். ஆண்பாலரும் செய்யலாம்.

திருவிளக்கு வழிபாடு செய்வதால் நம் வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகும். திருவிளக்கு வழிபாடு தினந்தோறும் நடைபெறும் இல்லங்களில் தெய்வபலம் பெருகுவதால் கெட்ட சக்திகள், செய்வினைகள் அணுகாது.



வழிபாட்டிற்கு தேவையான  பொருட்கள்


திருவிளக்கு, வாழை இலை, வெற்றிலை, பாக்கு, நிவேதனப் பொருட்கள்(பழங்கள், அவல், பொரி, கற்கண்டு)திருநீறு, குங்குமம், சந்தனம், உதிரி பூ, ஊதுபத்தி, துளசி, கற்பூரம், ஊதுபத்தி தட்டு, கற்பூர தட்டு, எண்ணெய், திரி, தீப்பெட்டி, கலசம், அரிசி, மஞ்சள்..

பூஜைக்கு தயாராகுதல்

திருவிளக்கை சுத்தம் செய்தல்

திருவிளக்கை  சுத்தமான உமியால் விளக்கி, தூய நீரால் துருமுழுக்காட்டி சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். திருவிளக்கை சுத்தம் செய்யும்போது தெய்வநாமங்களை மனதில் ஜெபித்துக்கொண்டே செய்ய வேண்டும்.

பீடம் அமைத்தல்

திருவிளக்கை வைக்க வேண்டிய பீடம் அல்லது இடம் சாணத்தால் மெழுகி (இல்லையெனில் மஞ்சள் பூசி) மாக்கோலம் இட்டு தூய்மையாக அமைக்க வேண்டும். எல்லோரும் வலம்வர வசதியாக ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும்.

அலங்காரம் செய்தல்

திருவிளக்கை அதற்கென அமைக்கப்பட்ட பீடத்தில் அல்லது இடத்தில் வைத்து தூய நீரில் திருநீற்றைக் குழைத்து முறையாகப்பூசி சந்தனத்தாலும், குங்குமத்தாலும் பொட்டுகள் இட்டு மலர்சரங்களால் அலங்காரம் செய்ய வேண்டும். கலசத்திலும் சந்தனத்தாலும் குங்குமத்தாலும் பொட்டுகள் இட வேண்டும்.

பூஜைக்கு அமருதல்

 

திருவிளக்கில் எண்ணெய்விட்டு, குறைந்தபட்சம் இரண்டு திரிகள் போட வேண்டும். திருவிளக்கினருகில் வாழையிலை இட்டு அதில் நிவேதனப் பொருட்களைப் படைக்க வேண்டும். ஊதுபத்திகளை அதற்குரிய தட்டில் வைக்க வேண்டும். நிவேதனம் செய்யும் பழத்தில் குத்திவைக்கக் கூடாது. கற்பூரத்தட்டில் சிறிதளவு திருனீறு வைத்து அதன்மேல் கற்பூரம் வைத்து அருகில் வைக்க வேண்டும். கற்பூரத்தட்டு இல்லாதவர்கள் வெற்றிலை அல்லது வாழைஇலை பயன்படுத்தலாம். ஆனால் நிவேதனம் செய்யும் வெற்றிலை பயன்படுத்தலாகாது



பூஜை செய்பவர் முதலில் திருவிளக்கிற்கு நமஸ்காரம் செய்து அமரவேண்டும். திருவிளக்கு வழிபாட்டினை நடத்துபவர் முதல் விளக்கருகில் அமர்ந்து கொள்ள வேண்டும்.

எல்லோரும் சொல்லுக : ஓம்.

ஸர்வே பவந்து ஸகின :
ஸர்வே ஸந்து நிராமயா :
ஸர்வே பத்ராணி பஸ்யந்து
மா கச்சித் துக்கபாக் பவேத்

 கணபதி வாழ்த்து


 ஐந்து கரத்தினை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.

கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி, விக்னேஸ்வர பாதபங்கஜம்

ஓம் ஸுமுகாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விக்ன ராஜாய நம:
ஓம் தூம கேதவே நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கஜகர்ணிகாய நம:
ஓம் விகடாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் கணாத்யஷாய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் ஸர்ப்பகர்ணாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:

ஓம் ஸ்ரீ விக்னேஸ்வர ஷோடஸ நாமாவளி நானாவித மந்த்ர, பரிமள பத்ர புஷ்பாணி சமர்ப்பயாமி


தீபம் ஏற்றி ஆவாஹனம் (எழுந்தருளல்) செய்தல்

கோவிலிலிருந்து தீபம் கொண்டுவந்து முதல் விளக்கை ஏற்றுக. அதனைத் தொடர்ந்து எல்லோரும் தீபம் ஏற்றவேண்டும்.

தீபம் ஏற்றும்போது

''ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி''

என்று சொல்ல வேண்டும். ஊதுபத்தி ஏற்றி வைக்கவும். பின் கீழ்வரும் பிரார்த்தனையைக் கேட்டுச் சொல்ல வேண்டும்.

''ஆதிபராசக்தி அம்பிகையே, நாங்கள் ஏற்றி வழிபடும் இந்தத் திருவிளக்கிலும் எங்கள் உள்ளத்திலும் எழுந்தருளி எங்களுக்கு வேண்டிய எல்லா நன்மைகளும் தந்தருள்வாயாக''.

ஸ்ரீ அம்பாள் வாழ்த்து

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே
ஸர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பகே கெளரி
நாராயணி நமோஸ்துதே
ஸ்ருஷ்டி ஸ்திதி விநாசானாம்
சக்திபூதே சனாதனி
குணாச்ரயே குணமயே
நாராயணி நமோஸ்துதே
சரணாகத தீனார்த்த
பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி
நாராயணி நமோஸ்துதே


 திருவிளக்கு ஸ்தோத்திரம்

விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே
சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே
அந்தி விளக்கே: அலங்கார நாயகியே
காந்தி விளக்கே: காமாக்ஷித் தாயாரே
பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டுக்
குளம்போல எண்ணெய் விட்டுக் கோலமுடன் ஏற்றி வைத்தேன்
ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளக்கு
வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் சோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாரும் அம்மா
பெட்டி நிறையப் பூஷனங்கள் தாரும் அம்மா
பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
புகழுடம்பைத் தாரும் அம்மா: பக்கத்தில் நில்லும் அம்மா
அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
சேவித்து எழுந்திருந்தேன்: தேவி வடிவம் கண்டேன்
வச்சிரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மேனி கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்: முழுப்பச்சைமாலை கண்டேன்
உரிமுடி கண்டேன்: தாழைமடல் சூடக் கண்டேன்
பின்னழகு கண்டேன்: பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன்: தாயார் வடிவம் கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டுக் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலென்னக் கணியாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன்: காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்
அன்னையே அருந்துணையே: அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாகும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:

இதனைப் பாடி முடித்தவுடன் பதினாறு நமஸ்காரம் செய்ய வேண்டும்.



கலச பூஜை

கலசத்திலுள்ள தண்ணீரில் அட்சதை (அரிசி, மஞ்சள்) இட்டு உள்ளங்கையால் கலசத்தை மூடிக்கொண்டு இம்மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

"கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நன்மதே ஸிந்து காவேரி
ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு"


பின் தீர்த்தத்தை ஆசமனம் பண்ண வேண்டும். (சிறிதளவு உள்ளங்கையில் விட்டு பருக வேண்டும். பின் சிறிதளவு நீர்விட்டு கையை சுத்தம் செய்ய வேண்டும்) அதன்பின் ஒரு மலரைத் தீர்த்தத்தில் நனைத்து, புஷ்பங்களிலும் நைவேத்தியத்திலும் நீரைத் தெளிக்க வேண்டும்.

அர்ச்சனை செய்யும் முறை

ஆள்காட்டிவிரல் தவிர இதர விரல்களால் குங்குமத்தையும் மலர்களையும் எடுத்து, இடது கை நெஞ்சோடு சேர்த்து வைத்து, விளக்கின் அடிப்பாகத்தை அம்பிகையின் பாதார விந்தங்களாக பாவித்து அர்ச்சனை செய்ய வேண்டும். முதலில் குங்குமத்தால் 54 அர்ச்சனைகளும் பின் கன்யாகுமரியை நம: என்று தொடங்கி 54 அர்ச்சனைகள் மலர்களாலும் அவ்விதம் மொத்தம் 108 அர்ச்சனைகள் செய்ய வேண்டும்.


1. ஓம் சிவாயை நம:
2. ஓம் சிவசக்த்யை நம:
3. ஓம் இச்சா சக்த்யை நம:
4. ஓம் க்ரியா சக்த்யை நம:
5. ஓம் ஸ்வர்ண ஸ்வரூபிண்யை நம:
6. ஓம் ஜ்யோதி லக்ஷ்ம்யை நம:
7. ஓம் தீப லக்ஷ்ம்யை நம:
8. ஓம் மகா லக்ஷ்ம்யை நம:
9. ஓம் தன லக்ஷ்ம்யை நம:
10. ஓம் தான்ய லக்ஷ்ம்யை நம:
11. ஓம் தைர்ய லக்ஷ்ம்யை நம:
12. ஓம் வீர லக்ஷ்ம்யை நம:
13. ஓம் விஜய லக்ஷ்ம்யை நம:
14. ஓம் வித்யா லக்ஷ்ம்யை நம:
15. ஓம் ஜய லக்ஷ்ம்யை நம:
16. ஓம் வர லக்ஷ்ம்யை நம:
17. ஓம் கஜ லக்ஷ்ம்யை நம:
18. ஓம் காம வல்யை நம:
19. ஓம் காமாக்ஷி ஸுந்தர்யை நம:
20. ஓம் சுப லக்ஷ்ம்யை நம:
21. ஓம் ராஜ லக்ஷ்ம்யை நம:
22. ஓம் க்ருஹ லக்ஷ்ம்யை நம:
23. ஓம் ஸித்த லக்ஷ்ம்யை நம:
24. ஓம் சீதா லக்ஷ்ம்யை நம:
25. ஓம் ஸர்வ மங்கள காரிண்யை நம:
26. ஓம் ஸர்வ துக்க நிவாரிண்யை நம:
27. ஓம் ஸர்வாங்க ஸந்தர்யை நம:
28. ஓம் ஸெளபாக்ய லக்ஷ்ம்யை நம:
29. ஓம் ஆதி லக்ஷ்ம்யை நம:
30. ஓம் ஸந்தான லக்ஷ்ம்யை நம:
31. ஓம் ஆனந்த ஸ்வரூபிண்யை நம:
32. ஓம் அகிலாண்ட நாயக்யை நம:
33. ஓம் பிரம்மாண்ட நாயக்கை நம:
34. ஓம் ஸுரப்யை நம:
35. ஓம் பரமாத்மிகாயை நம:
36. ஓம் பத்மாலயாயை நம:
37. ஓம் பத்மாயை நம:
38. ஓம் தன்யாயை நம:
39. ஓம் ஹிரண்மய்யை நம:
40. ஓம் நித்யபுஷ்டாயை நம:
41. ஓம் தீப்தாயை நம:
42. ஓம் வஸுதாயை நம:
43. ஓம் வஸுதாரிண்யை நம:
44. ஓம் கமலாயை நம:
45. ஓம் காந்தாயை நம:
46. ஓம் அனுக்ரஹப்ரதாயை நம:
47. ஓம் அனகாயை நம:
48. ஓம் ஹரிவல்லபாயை நம:
49. ஓம் அசோகாயை நம:
50. ஓம் அம்ருதாயை நம:
51. ஓம் துர்க்காயை நம:
52. ஓம் நாராயண்யை நம:
53. ஓம் மங்கல்யாயை நம:
54. ஓம் கிருஷ்ணாயை நம:
55. ஓம் கன்யாகுமார்யை நம:
56. ஓம் ப்ரஸன்னாயை நம:
57. ஓம் கீர்த்யை நம:
58. ஓம் ஸ்ரீயை நம:
59. ஓம் மோஹ நாசின்யை நம:
60. ஓம் அபம்ருத்யு நாசின்யை நம:
61. ஓம் வியாதி நாசின்யை நம:
62. ஓம் தாரித்ரிய நாசின்யை நம:
63. ஓம் பயநாசின்யை நம:
64. ஓம் சரண்யாயை நம:
65. ஓம் ஆரோக்யதாயை நம:
66. ஓம் ஸரஸ்வத்யை நம:
67. ஓம் மஹாமாயாயை நம:
68. ஓம் புஸ்தக ஹஸ்தாயை நம:
69. ஓம் ஜ்ஞான முத்ராயை நம:
70. ஓம் ராமாயை நம:
71. ஓம் விமலாயை நம:
72. ஓம் வைஷ்ணவ்யை நம:
73. ஓம் ஸாவித்ரியை நம:
74. ஓம் வாக்தேவ்யை நம:
75. ஓம் பாரத்யை நம:
76. ஓம் கோவிந்த ரூபிண்யை நம:
77. ஓம் சுபத்ராயை நம:
78. ஓம் திரிகுணாயை நம:
79. ஓம் அம்பிகாயை நம:
80. ஓம் நிரஞ்ஜனாயை நம:
81. ஓம் நித்யாயை நம:
82. ஓம் கோமத்யை நம:
83. ஓம் மஹாபலாயை நம:
84. ஓம் ஹம்ஸாஸனாயை நம:
85. ஓம் வேதமாத்ரே நம:
86. ஓம் சாரதாயை நம:
87. ஓம் ஸ்ரீ மாத்ரே நம:
88. ஓம் சர்வாபாணபூ ஷிதாயை நம:
89. ஓம் மஹாசக்த்யை நம:
90. ஓம் பவான்யை நம:
91. ஓம் பக்திப்பிரியாயை நம:
92. ஓம் சாம்பவ்யை நம:
93. ஓம் நிர்மலாயை நம:
94. ஓம் சாந்தாயை நம:
95. ஓம் நித்ய முக்தாயை நம:
96. ஓம் நிஷ்களங்காயை நம:
97. ஓம் பாபநாசின்யை நம:
98. ஓம் பேதநாசின்யை நம:
99. ஓம் ஸுகப்ரதாயை நம:
100. ஓம் ஸர்வேச்வர்யை நம:
101. ஓம் ஸர்வமந்த்ர ஸ்வரூபிண்யை நம:
102. ஓம் மனோன்மன்யை நம:
103. ஓம் மஹேச்வர்யை நம:
104. ஓம் கல்யாண்யை நம:
105. ஓம் ராஜராஜேச்வர்யை நம:
106. ஓம் பாலாயை நம:
107. ஓம் தர்ம வர்த்தின்யை நம:
108. ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நம:

பின் பூக்களை எடுத்து நெஞ்சோடு சேர்த்து வைத்து:-

ஓம் நானாவித மந்த்ர பரிமள பத்ர
புஷ்பாணி சமர்ப்பயாமி.

என்று சொல்லி சமர்ப்பிக்கவும்.

ஒவ்வொரு போற்றியின் ஆரம்பத்திலும் "ஓம்" என்று சேர்த்து சொல்லவும்.

1. பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
2. போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
3. முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
4. மூவுலகம் நிறைந்திருந்தாய் போற்றி
5. வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி
6. இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
7. ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி
8. பிறர்வயமாகாப் பெரியோய் போற்றி
9. பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
10. பேரருட் கடலாம் பொருளே போற்றி
11. முடிவில் ஆற்றில் உடையாய் போற்றி
12. மூவுலகும் தொழும் மூத்தோய் போற்றி
13. அளவிலாச் செல்வம் தருவோய் போற்றி
14. ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
15. ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி
16. இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி
17. மங்கள நாயகி மாமணி போற்றி
18. வளமை நல்கும் வல்லியை போற்றி
19. அறம்வளர் நாயகி அம்மே போற்றி
20. மின் ஒளி அம்மையாம் விளக்கே போற்றி
21. மின்ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
22. தையல் நாயகித் தாயே போற்றி
23. தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
24. முக்கட்சுடரின் முதல்வி போற்றி
25. ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
26. சூளாமணியே சுடரொளி போற்றி
27. இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி
28. அருள் பொழிந்து எம்மை ஆள்வோய் போற்றி
29. அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி
30. இல்லக விளக்காம் இறைவி போற்றி
31. சுடரே விளக்காம் தூயோய் போற்றி
32. இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
33. எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
34. ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
35. அருமறைப் பொருளாம் ஆதி போற்றி
36. தூண்டு சுடரனைய ஜோதி போற்றி
37. ஜோதியே போற்றிச் சுடரே போற்றி
38. ஓதும் உள்ஒளி விளக்கே போற்றி
39. இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி
40. சொல்லக விளக்காம் ஜோதி போற்றி
41. பலர்காண் பல்லக விளக்கே போற்றி
42. நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி
43. உலப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
44. உணர்வுசூழ் கடந்ததோர விளக்கே போற்றி
45. உடம்பெனும் மனையக விளக்கே போற்றி
46. உள்ளத்தகழி விளக்கே போற்றி
47. மடம்படும் உணர்நெய் விளக்கே போற்றி
48. உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி
49. இடம்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
50. நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி
51. ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
52. அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
53. ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
54. தில்லைப் பொது நட விளக்கே போற்றி
55. கருணையே உருவாம் விளக்கே போற்றி
56. கற்பனை கடந்த ஜோதி போற்றி
57. அற்புதக்கோல விளக்கே போற்றி
58. அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
59. சிற்பர வியோம விளக்கே போற்றி
60. பொற்புடன் நஞ்செய் விளக்கே போற்றி
61. உள்ளத்திருளை ஒழிப்பாய் போற்றி
62. கள்ளப்புலனைக் கரைப்பாய் போற்றி
63. உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
64. பெருகு அருள்சுரக்கும் பெருமான் போற்றி
65. இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி
66. அருவே உருவே அருவுரு போற்றி
67. நந்தா விளக்கே நாயகியே போற்றி
68. செந்தாமரைத்தாள் தந்தாய் போற்றி
69. தீபமங்கள் ஜோதி போற்றி
70. மதிப்பவர் மனமணி விளக்கே போற்றி
71. பாகம் பிரியா பராபரை போற்றி
72. ஆகம முடிமேல்அமர்ந்தாய் போற்றி
73. ஏகமாய் நடஞ்செய் எம்மான் போற்றி
74. ஊழி ஊழி உள்ளோய் போற்றி
75. ஆழியான் காணா அடியோய் போற்றி
76. ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி
77. அந்தமில் இன்பம் அருள்வோய் போற்றி
78. முந்தைய வினையை முடிப்போய் போற்றி
79. பொங்கும் கீர்த்திப் பூரணீ போற்றி
80. தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி
81. அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
82. இருநில மக்கள் இறைவி போற்றி
83. குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி
84. ஆறுதல் எமக்கிங்கு அளிப்பாய் போற்றி
85. தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி
86. பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
87. எத்திக்கும் துதி எந்தாய் போற்றி
88. அஞ்சலென்றருளும் அன்பே போற்றி
89. தஞ்சமென்றவரைச் சார்வோய் அன்பே போற்றி
90. ஓதுவார்அகத்துறை ஒளியே போற்றி
91. ஓங்காரத்துள்ளொளி விளக்கே போற்றி
92. எல்லா உலகமும் ஆனாய் போற்றி
93. பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
94. புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் போற்றி
95. செல்வாய செல்வம் தருவாய் போற்றி
96. பூங்கழல் விளக்கே போற்றி போற்றி
97. உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
98. உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
99. செல்வ கல்வி சிறப்பருள் போற்றி
100. நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி
101. விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி
102. நலம் எலாம் உயிர்க்கு நல்குக போற்றி
103. தாயே நின்னருள் தருவாய் போற்றி
104. தூய நின் திருவடி தொழுதனம் போற்றி
105. போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
106. போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
107. போற்றி என் அன்புபொலி விளக்கே போற்றி
108. போற்றி போற்றி திருவிளக்கே போற்றி

திருச்சிற்றம்பலம்


 நிவேத்யம்

நிவேத்யப் பொருள்களை அம்பிகைக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஓம் ப்ரம்மார்ப்பணம் ப்ரம்மஹவிர்
ப்ரம்மாக்னெள ப்ரம்மணாஹுதம்
ப்ரம்மைவ தேன கந்தவ்யம்
ப்ரம்மகர்ம சமாதினா

பின் கீழ் ஆறு மந்திரங்களைச் சொல்லி ஆறுதடவை நிவேத்யத்தை வலது கைவிரல்களால் எடுப்பது போலவும் தேவிக்கு ஊட்டுவது போலவும் சைகை காட்டவும்.

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, அபானாய் ஸ்வாஹா
வ்யானாய ஸ்வாஹா, உதானாய ஹ்வாஹா
ஸமானாய ஹ்வாஹா பிரம்மணே ஸ்வாஹா

பாட்டு

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்!
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே!
                                                              திருமந்திரம்

அன்னையே அருந்துணையே: அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா!
தாயாகும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:!

ஓம்சக்க்தி ஓம்சக்க்தி ஓம்சக்க்திஓம்
ஆதிபராசக்தி மஹாசக்தி பராசக்திஓம்
இச்சாசக்தி ஞானசக்தி கிரியாசக்திஓம்
பிரும்மசக்தி விஷ்ணுசக்தி சிவசக்திஓம்

தீபாராதனை


 திருவிளக்கிற்கு மூன்று முறை கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும். பின் திருவிளக்கின் முன் கற்பூர தீபத்தை வைத்து மலரால் வலம் சுற்றி திருவிளக்கிற்கு சமர்ப்பிக்க வேண்டும். கற்பூர தீபத்தைத் தொட்டு கண்ணிலும் தலையிலும் நெஞ்சிலும் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிரார்த்தனை

கண்களை மூடி இருதய கமலத்தில் அம்பிகை வீற்றிருப்பதைக் காணுக. அமைதியாக கீழ்வரும் பிரார்த்தனையைக் கேட்டுச் சொல்லுக.

ஓம் ஸர்வே பவந்து ஸுகின:
ஸர்வே ஸந்து நிராமயா:
ஸர்வே பத்ராணி பஸ்யந்து
மா கச்சித் துக்கபாக் பவேத்

எல்லோரும் சுகமாக வாழ்க! எல்லோரும் நோயின்றி வாழ்க! எல்லோருக்கும் மங்களம் உண்டாகுக! ஒருவரும் துன்புறாதிருக்க வேண்டும்!

ஒம் அஸதோ மா ஸத்கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர்மா அம்ருதம் கமய

பொய்யிலிருந்து என்னை மெய்மைக்கு வழி நடத்துவாயாக
அஞ்ஞான இருளிலிருந்து ஞானஜோதிக்கு வழி நடத்துவாயாக
மரணத்திலிருந்து மரணமில்லாப் பெருவாழ்வுக்கு அழைத்துச் செல்வாயாக

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம்
பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய
பூர்ண மேவாவசிஷ்யதே!

ஓம் சாந்தி; சாந்தி; சாந்தி

இரண்டு நிமிஷம் தியானம் செய்க 'ஹரி ஓம் தத் ஸத்' எனச் சொல்லி தியானம் நிறைவு செய்க.

பின் சுடர்விடும் தீபங்களை மலரால் நிறுத்தி பிரசாதங்களை அவரவர்களே எடுத்துக் கொள்ளவும் குங்குமத்தை கவனமாக எடுத்துச் சென்று தினமும் பொட்டு இட்டுக் கொள்ளவும் சர்வ மங்களங்களும் உண்டாகும்.

(அர்ச்சனை செய்த மலர்களைக் காலால் மிதிக்காமல் நீர் நிலைகளிலோ சுத்தமான இடங்களிலோ போடவும். தீர்த்த ஜலத்தை கால் மிதிபடாத இடத்தில் கொட்டவும்).

மங்களம்

சங்கராய சங்கராய சங்கராய மங்களம்
சங்கரி மனோஹராய சாஸ்வதாய மங்களம்
குருவராய மங்களம்-தத்தாத்ரேயாய மங்களம்
கஜானனாய மங்களம்-ஷடானனாய மங்களம்
ரகுவராய மங்களம்-வேணுகிருஷ்ண மங்களம்
ஸீதாராம மங்களம்-ராதாகிருஷ்ண மங்களம்
அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினுக்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக்கு அனந்தகோடி மங்களம்
என்னுளே விளங்கும் எங்கள் ஈசுவரிக்கு மங்களம்
இச்சையாவும் முற்றுவிக்கும் சிற்சிவைக்கு மங்களம்
தாழ்விலாத தன்மையும் தளர்சியற்ற வன்மையும்
வாழ்வினால் பயன்களும் என் வாக்கிலே வரங்களும்
பக்தியில் கசிந்தலைந்து பாடுகின்ற பான்மையும்
பாடுவோர்க்கனேக போக பாக்கியங்கள் மேன்மையும்
என்றும் ஓங்க என் கரத்து இயற்கையான சக்தியை
தந்து ஞான மூர்த்தியாய் தனித்து வைத்த சக்தியாம்
நாம கீர்த்தனம் பரந்து நாடெல்லாம் செழிக்கவும்
வேறிடாத இன்பம் பொங்கி வீடெலாம் விளங்கவும்
ஞானதீபமேற்றி என்றும் நாமகீதம் பாடுவோம்
தர்மசக்தி வாழ்கவென்று சந்தததம் கொண்டாடுவோம்


விளக்கேற்றும் பலன்

நெய்தீபம் - ஞானம் ஏற்படும்.
நல்லெண்ணெய தீபம் - எம பயம் போக்கும்.
இலுப்பை எண்ணெய் தீபம் - ஆரோக்கியம்
விளக்கெண்ணெய் தீபம் - சகல செல்வமும் கிடைக்கும்

ஒரு முக தீபம் - மத்திம பலன் தரும்
இரண்டு முக தீபம் - குடும்பம் ஒற்றுமை தரும்
மூன்று முக தீபம் - புத்திர சுகம் தரும்
நான்கு முக தீபம் - பசு, பூமி, சுகம் தரும்
ஐந்து முக தீபம் - செல்வம் பெருகும்.

தீபமேற்ற...

கிழக்கு நோக்கி தீபமேற்ற - துன்பங்கள் நீங்கி பீடை விலகும்
மேற்கு நோக்கி தீபமேற்ற - கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்
தெற்கு நோக்கி தீபமேற்ற - பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி.
வடக்கு நோக்கி தீபமேற்ற - திருமணத்தடை, சுபகாரியத் தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.